states

img

உ.பி அலகாபாத் பல்கலைக்கழக கல்வி கட்டணம் 400% உயர்வு - மாணவர்கள் போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல், கல்வி கட்டணம் 400% உயர்த்தப்பட்டுள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், அப்பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணம் 400% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி "ஜிந்தாபாத்” என்ற முழக்கத்துடன் மாபெரும் பேரணி நடத்தினர்.  
 

;